நாம் அதிகமாக அமெரிக்காவிற்கு தான் ஏற்றுமதி செய்கிறோம். அதே நேரத்தில் நமக்கும் அமெரிக்காவுக்கும் எந்த ஒரு இலவச வர்த்தக ஒப்பந்த நடவடிக்கையும் இல்லை. இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி வரி விலக்கை தரும். அதன் மூலம் அவர்கள் அதிக லாபம் பெற முடியும். ஆனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் போது இந்த வரி விலக்கு கிடைக்காது. அதே நேரம் நாம் மொரிசியஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் போது அமெரிக்க இறக்குமதியாளர் இந்த வரி விலக்கை பெற முடியும். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மொரிசியஸ் ஹை கமிஷனர் இது பற்றி தெரிவித்துள்ளார். African growth and opportunity act (AGOA) என்ற ஒப்பந்தம் மொரிசியஸ் நாட்டு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரிசியஸ் நாட்டில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதியாளர்கள் வரி எதுவும் செலுத்த தேவையில்லை. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள் மொரிசியஸில் தங்களது நிறுவனத்தை பதிவு செய்து அங்கிருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்த பயனை அடையலாம். இறக்குமதியாளர்களை தக்க வைப்பதற்கும் மேலும் புதிய ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதற்கும் இது வழிவகுக்கும். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள மொரிசியஸ் ஹை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Comments
Post a Comment