அரிசி ஏற்றுமதி மற்றும் பாமாயில் இறக்குமதி
நாம் அதிக அளவில் பாமாயிலை இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஒரு வருடத்திற்கு 9 மில்லியன் டன்கள் அளவிற்கு நாம் இறக்குமதி செய்கிறோம். இந்தச் சூழலில் மலேசியா நம்மிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. மலேசியாவிற்கு பாஸ்மதி அல்லாத அரிசி 5 லட்சம் டன் தேவை என்பதை அந்த கோரிக்கை. பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாம் ஏற்றுமதி செய்ய முடியாது என்று கூறினால், மலேசியா இதே போன்ற கட்டுப்பாடுகளை பாமாயில் ஏற்றுமதியில் விதிக்கக்கூடும் அல்லவா? எனவே மத்திய அரசு 2 லட்சம் டன் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய முடிவு எடுத்துள்ளது. ஆனால் இது மத்திய அரசு நிறுவனத்தால் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும். இந்திய தனியார் ஏற்றுமதி நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்படாது.
Comments
Post a Comment