மங்களூர் விமான நிலையத்தில் சமீபத்தில் சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி முனையம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டது.
அதன்படியே அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் கேரள மற்றும் கர்நாடக ஏற்றுமதியாளர்களின் சரக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கொச்சின் விமான நிலையத்தில் இடம் கிடைக்காததால் பல கேரள ஏற்றுமதியாளர்கள் கோயம்புத்தூர் மற்றும் திருச்சி விமான நிலைய ஏற்றுமதி முனையத்தை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மங்களூர் ஏற்றுமதி முனையம் செயல்பாட்டுக்கு வந்ததால் அவர்கள் அங்கிருந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
Comments
Post a Comment