ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு நாடுகள் உள்நாட்டு விற்பனை மற்றும் இறக்குமதியில் ஒரு முக்கிய முடிவெடுத்துள்ளன. காடுகளை ஒழித்து அங்கு விவசாயம் செய்து விளைவிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதும் உள்நாட்டில் விற்பனை செய்வதும் டிசம்பர் 31 2024க்கு பிறகு முழுமையாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவிலிருந்து அதிக அளவில் காபி ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆகவே பல நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் காபியை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்ள துவங்கியுள்ளன. காபி மட்டுமல்லாமல் ரப்பர், மரப்பொருட்கள், பல்வேறு வகையான விவசாய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இது போன்ற பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய கூட்டணி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சிறப்பு சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழ் பற்றிய முழு விவரங்கள் SGS இணையதளத்தில் உள்ளன.
ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஆலோசனைக்கு கீழ்க்கண்ட எண்ணிற்கு WHATSAPP அனுப்பவும்.
Comments
Post a Comment