அதிரடியாக உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகள்.

அதிரடியாக உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகள். 
இந்திய அரசு அவ்வப்போது ஆன்ட்டி டம்பிங் டூட்டி எனப்படும் இறக்குமதி வரிவதிப்பை மேற்கொள்ளும். 
அதன்படி தற்போது மூன்று பொருட்களுக்கு அதிரடியாக இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற வரி உயர்வு உள்நாட்டு தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே மேற்கொள்ளப்படும்.
ஹைட்ராலிக் ராக் பிரேக்கர் இறக்குமதிக்கு 162.5% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஐந்து வருட காலங்களுக்கு அமலில் இருக்கும். சைனா மற்றும் கொரியாவில் இருந்து நாம் இதை அதிக அளவு இறக்குமதி செய்கிறோம். 
அடுத்ததாக உணவுப் பொருட்களை பேக் செய்ய உபயோகப்படும் டின் பிளேட்டுகள் இறக்குமதி செய்வதற்கு 741 அமெரிக்க டாலர்கள் (ஒரு லட்ச ரூபாய்க்கு) வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இதுவும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். 
மூன்றாவதாக டெலஸ்கோபி சேனல் டிராயர் ஸ்லைடர் இறக்குமதிக்கு தன் ஒன்றுக்கு 614 டாலர்கள் வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

Comments