கொண்டாட்டத்தில் இறக்குமதியாளர்கள்

இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கொண்ட CEPA ஒப்பந்தத்தின் விளைவாக நாம் அதிக பொருட்களை அங்கு ஏற்றுமதி செய்கிறோம். 
இதன் மூலம் அமீரகமும் பயன்பெற்று வருகிறது. 
இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கவனிக்க தவறிய ஒரு விஷயம் வெள்ளி. 
தற்போது வெள்ளி இறக்குமதிக்கு 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமீரகத்தில் இருந்து இறக்குமதி செய்தால் இறக்குமதி வரி ஏழு சதவீதம் மட்டுமே. 
இதனால் இந்தியாவில் நகை தொழில் உள்ளவர்கள் அங்கிருந்து அதிகமாக வெள்ளி இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளனர். 
இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த எட்டு வருடங்களில் ஏழு சதவீதம் என்பது பூஜ்ஜியமாக குறைக்கப்பட வேண்டும் என்பது விதி. 
இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளி மூலம் இந்திய அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்பு சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய். 
ஒப்பந்தத்தின் படி இந்த வரி படிப்படியாக குறைக்கப்பட்டால் இழப்பு மேலும் அதிகரிக்கும். 
ஆகவே இந்திய அரசு இது சம்பந்தமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளது. 
அமீரகம் வெள்ளி உற்பத்தி செய்வதில்லை. ஆனால் தேவையை உணர்ந்து அவர்கள் வெள்ளியை இறக்குமதி செய்து மீண்டும் மறு ஏற்றுமதி செய்கிறார்கள். இதன் மூலம் பெரிய அளவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் அந்நிய செலாவணியை ஈட்டுகிறது.

Comments