சைனா பிளஸ் ஒன் என்றால் என்ன?

சைனா பிளஸ் ஒன் என்றால் என்ன? 
உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் சைனாவுக்கு மாற்றாக ஒன்றை எதிர்பார்க்கின்றன. 
இது முழுக்க முழுக்க சைனாவில் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாற்றம். 
சைனாவுக்கு மாற்று என்றால் இந்தியா தவிர வேறு எந்த நாடும் பெரும்பாலும் நினைவுக்கு வருவதில்லை. 
இதன் காரணமாக சைனாவில் பெரிய அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் சைனா தவிர்த்து இந்தியாவிலும் முதலீடுகளை அதிகரிக்க துவங்கியுள்ளன. 
இது ஒரு பாதுகாப்பான நடவடிக்கை என்று நினைக்கின்றன.
இதுவே சைனா பிளஸ் ஒன். 
இதே போல ஒரு சில நாடுகளும் தங்களது முதலீடுகளை சைனாவில் இருந்து குறைத்து இந்தியா போன்ற நாடுகளில் அதிகப்படுத்தி உள்ளன. 
நிறுவனங்களை பொறுத்தவரை ஆப்பிள் நிறுவனம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை துவங்கிய பிறகு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் சாதனை தொடர்ந்து செய்து கொண்டுள்ளது. 
முடிவாக சைனா பிளஸ் ஒன் என்பது இந்தியாவிற்கு சாதகமான ஒன்று.

Comments