ஆப்பிள் இறக்குமதி - ஒரு எச்சரிக்கை

அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் துருக்கி நாடுகளில் இருந்து நாம் அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி செய்கிறோம்.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்களில் உள்ள மெழுகு பூச்சு இந்திய உணவு தரத்திற்கு எதிராக உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
இதுல கூட இந்தியா இது போன்ற உணவு தரத்தில் உள்ள சில மெழுகு பூச்சுகளை அனுமதிக்கிறது. 
குறிப்பாக தேன் மெழுகு பூச்சு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
நாம் வெளிநாடுகளில் இருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்யும் போது மெழுகு பூச்சு தரச் சான்றிதழ் பெற்று இறக்குமதி செய்வது நல்லது. இல்லையென்றால் இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் நாம் இறக்குமதி செய்த ஆப்பிள் அழிக்கப்படும்.

Comments