அரவிந்த் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் ஒரு சாதாரண பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிய முடிவு எடுத்தான்.
அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பளம். கல்லூரியில் சில ஆயிரங்கள் மட்டுமே.
இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் அவனுக்கு வந்த கழுத்து வலி. நீண்ட நேரமாக தொடர்ந்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்தது அவனுக்கு முதுகு தண்டுவடம் மற்றும் கழுத்தை கடுமையாக பாதித்தது.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. மருத்துவர்கள் அறிவுரைப்படி வேறு வழியில்லாமல் வேலையை விட்டான்.
கல்லூரியில் சேர்ந்து சில மாதங்கள் ஆயின. ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும் போதும் மனவேதனை தான்.
அமெரிக்காவில் இருக்கும்போது குடும்பத்தோடு வாரம் ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கம்.
ஒரு மாதத்திற்கு ஹோட்டலுக்கு செலவழிக்கும் தொகை இந்தியாவில் அவனுக்கு சம்பளமாக கிடைத்தது.
அதிகமாக சம்பாதித்தவனால் குறைந்த சம்பளம் வாங்குவதை ஜீரணிக்க முடியவில்லை..
இந்தச் சூழலில், கழுத்து வலிக்காக டாக்டர்கள் கழுத்து பெல்ட் ஒன்றை பரிந்துரைத்தார்கள்.
அவர்கள் குறிப்பிட்ட அந்த பெல்ட் மருந்து கடைகளில் கிடைக்காததால் அமேசானில் தேடிப் பார்த்தான்.
அப்போது தற்செயலாக பயணத்தின் போது அணியக்கூடிய கழுத்து தலையணையை ( Travel Neck Pillow) பார்த்தான்.
அதன் விலை அவனுக்கு ஆச்சரியம் ஊட்டியது. ஏனென்றால் அமெரிக்காவில் இருந்தபோது இதே போன்ற ஒரு கழுத்து தலையணையை அவன் மிக அதிக விலைக்கு வாங்கி இருந்தான்.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கழுத்து தலையணை விலையை பார்த்தபோது அவனுள்ஒரு மின்னல் வெட்டியது.
இந்தியாவில் அதன் விலை சுமார் 200 ரூபாய். அமெரிக்காவில் அதன் விலை சுமார் 1000 ரூபாய்.
தீவிர தேடலுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு சப்ளையரை கண்டுபிடித்தான்.
அமெரிக்காவில் உள்ள அமேசான் இணையதளத்தில் பொருளை பட்டியலிட்டான்.
கொஞ்சம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய வேண்டி இருந்தது..
கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடு பிடித்தது.
கழுத்து தலையணை வாங்கினால் மாஸ்க் இலவசம் என்று மார்க்கெட்டிங் செய்தான்.
விற்பனை மேலும் அதிகரித்தது.
ஆறே மாத காலத்தில், அவனது வருமானம் அமெரிக்காவில் அவன் வாங்கிய சம்பளத்தை எட்டியது..
வாழ்வில் ஒரு நம்பிக்கை வந்தது..
அமேசான் மூலம் இந்தியாவில் விற்பனை செய்வது மற்றும்
இந்தியாவிலிருந்து கொண்டே அமெரிக்காவில் அமேசானில் பொருட்களை விற்பதை பற்றிய ஆன்லைன் பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணிற்கு "ஈகாமர்ஸ் ஏற்றுமதி" என்று வாட்ஸ் அப் செய்யுங்கள்.
WhatsApp 91-9043441374
Comments
Post a Comment