குமார் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தான். சென்னையில் interior decoration செய்து கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை. மூங்கிலைக் கொண்டு கிச்சன் கேபினெட்டுகளை அழகாக வடிவமைப்பதில் கில்லாடி குமார்.
ஒரு கட்டத்தில் குமாருக்கு திருமணம் ஆனது, குழந்தையும் பிறந்து விட்டது. வீட்டில் செலவு அதிகமானதே தவிர நிறுவனம் சம்பளத்தை உயர்த்த வில்லை. மாசக் கடைசியில் கையில் காசு இல்லாமல் படாதபாடு பட்டான் குமார்.
அன்று..
போயஸ் கார்டனில் மிகப்பெரிய தொழில் அதிபர் வீட்டில் கிச்சன் கேபினட்டை அமைத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த தொழிலதிபரின் மனைவி தனது போனில் அமேசான் இணையதளத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட kitchen organiser ஒன்றை காண்பித்து இதே போல் செய்ய வேண்டும் என்றாள்.
அந்த போட்டோவை அமேசான் இணையதளத்தில் பார்த்த அடுத்த நொடி அதிர்ந்து போனான் குமார். அவனை அதிர்ச்சி கொள்ளாக்கியது அந்த organiser விலை.. மிக எளிதாக அரை மணி நேரத்தில் மூங்கில் கொண்டு வந்த ஆர்கனைசரை அவனால் உருவாக்கி விட முடியும். அதற்கு அதிகபட்சமாகும் செலவு 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை மட்டுமே. ஆனால் அமேசானில் பட்டியலிடப்பட்ட விலை 1800 ரூபாய்.
அன்று இரவு அவனது மனைவியிடம் இது பற்றி விவாதித்தான். குமாரின் மனைவி நன்கு படித்தவள். உடனடியாக அவள் அமேசான் இணையதளத்தில் அதன் விலை விவரங்களை பார்த்தாள். 1500 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் வரை வெவ்வேறு டிசைன்களில் அந்த ஆர்கனைசர் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த டிசைன்கள் எல்லாம் குமாருக்கு அத்துபடி. ஆனால் அவற்றை எப்படி அமேசானில் விற்பது என்று அவனுக்கு தெரியாது. குமாரின் மனைவி அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.
அமேசானில் பொருட்களை எப்படி விற்பனை செய்வது என்று முழுமையாக கற்றுக் கொண்டாள். அவள் கற்றுக் கொண்ட இடத்தில் இந்தியாவில் மட்டும் அல்ல இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாடுகளில் உள்ள அமேசானிலும் நாம் எப்படி விற்பனை செய்வது என்று சேர்த்து கற்றுக் கொடுத்தார்கள். அதன்பிறகு இதே ஆர்கனைசர் அமெரிக்காவில் என்ன விலைக்கு விற்பனையாகிறது என்று பார்த்தபோது அவளுக்கு இன்ப அதிர்ச்சி. 28 டாலர்கள் அதாவது ரூபாய் 2324. 200 ரூபாய்க்கு தயாரிக்க கூடிய ஒரு பொருளை இந்தியாவில் 1800 ரூபாய்க்கும் அமெரிக்காவில் 2300 விற்க முடியும் என்று அறிந்து கொண்டாள். காலதாமதம் செய்யாமல் முதலில் amazon.in இல் மூங்கில் ஆர்கனைசரை பட்டியல் இட்டாள்.
மூன்று மாதம் கழிந்தது. குமார் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வருமானம் வந்தது. மேலும் தாமதிக்காமல் அமெரிக்காவில் (amazon.com) பட்டியலிட்டாள். குமார் தனது கைத்திறனை டிசைன்களில் காண்பித்தான். அவன் உருவாக்கிய டிசைன்கள் போல அமேசானில் யாரும் விற்பனை செய்யவில்லை. அமெரிக்காவில் இது போன்ற டிசைன்களை போட்டி போட்டுக் கொண்டு மக்கள் வாங்கினர்.
ஒரு வருடம் கழிந்தது.. குமாரின் வாழ்க்கை தலைகீழாக மாறி இருந்தது.
வீட்டு வாசலில் நின்ற தனது புது பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு ஹாரன் அடித்தான். லோன் இல்லாமல் முழு பணமும் கொடுத்து குமார் வாங்கிய பைக் அது. ஆரஞ்சு சத்தம் கேட்டு குமாரின் மனைவி வெளியே வந்தாள். அவள் கழுத்தில் இரண்டு நாள் முன்பு வாங்கிய தங்க நெக்லஸ் மினுமினித்தது...
அவளைப் பார்த்து புன்னகைத்தவாறு பைக்கை கிளப்பினான்..
அமேசான் மூலம் இந்தியாவில் விற்பனை செய்வது மற்றும்
இந்தியாவிலிருந்து கொண்டே அமெரிக்காவில் அமேசானில் பொருட்களை விற்பதை பற்றிய ஆன்லைன் பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணிற்கு "ஈகாமர்ஸ் ஏற்றுமதி" என்று வாட்ஸ் அப் செய்யுங்கள்.
WhatsApp 91-9043441374
Comments
Post a Comment