பங்களாதேஷ் எந்தெந்த பொருட்களுக்கு இந்தியாவை நம்பி உள்ளது?

பங்களாதேஷ் எந்தெந்த பொருட்களுக்கு இந்தியாவை நம்பி உள்ளது?


சமீபத்தில் வங்காளத்தை சார்ந்த வெளி உறவு துறை அமைச்சர் இந்தியா வந்திருந்தார். இந்திய தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயலை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார். ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக 50,000 டன் வெங்காயம் மற்றும் ஒரு லட்சம் டன் சர்க்கரை பங்களாதேஷிற்கு தேவைப்படுவதாக தெரிவித்தார். இவற்றை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக 20 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்வோம் என்று நமது தொழில் துறை அமைச்சர் கூறினார். மற்ற கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வங்காள தேசத்தின் வெளிவரவுத்துறை அமைச்சர் வங்காளதேசம் சில பொருட்களுக்கு இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளது என்று கூறினார். வெங்காயம், சர்க்கரை மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றிற்கு பங்களாதேஷ் முழுமையாக இந்தியாவை நம்பி உள்ளது என்றார். இது போன்ற பொருட்களுக்கு இந்தியா ஏற்றுமதி தடை விதிக்கும் போது பெரிய அளவில் பங்களாதேஷ் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். 



தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா? 

https://sites.google.com/view/micro-stories/home


இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.

#ஏற்றுமதி

 

Comments