இந்திய மார்க்கெட்டை பிடிக்க முன்னேறும் அமெரிக்கா.
உலகின் பல்வேறு நாடுகளில் வியாபாரத்தில் கால் பதித்து வெற்றிகரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. தனது நட்பு நாடான இந்தியா மூலம் தொழிலில் இப்படி ஒரு பின்னடைவு வரும் என அமெரிக்கா கனவிலும் நினைத்து இருக்காது. ஒரு காலத்தில் வாஷிங்டன் ஆப்பிள் இந்தியாவில் 90 சதவீத ஆப்பிள் மார்க்கெட்டை கைப்பற்றி இருந்தது. பல்வேறு காரணங்களால் அந்த மார்க்கெட் மதிப்பு ஒரு சதவீதத்திற்கு குறைந்துவிட்டது. இதனால் அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் தவித்துப் போயினர். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இந்தியாவில் கால் பதிக்க துவங்கியிருக்கிறது வாஷிங்டன் ஆப்பிள். செப்டம்பர் மாதம் இறுதியில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாஷிங்டன் ஆப்பிளுக்கு இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கியது இந்தியா. இதன் மூலம் மீண்டும் பழைய மார்க்கெட்டை பிடிக்க அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். அதேவேளை இந்தியாவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்யும் துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் பின்னுக்கு தள்ளப்படும் என்று தெரிகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment