ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளுக்கு தடை விதிக்கப்பட்டால்??

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளுக்கு தடை விதிக்கப்பட்டால்??


ஒரு இறக்குமதியாளர் ஏற்றுமதியாளருக்கு ஆடர் கொடுத்த பிறகு அந்த நாட்டில் அந்த குறிப்பிட்ட பொருளுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டால் அதை கையாளும் வழிமுறைகள்.


1. ஏற்றுமதியாளர் பொருளை தயாரிப்பதில் ஈடுபடுவதற்கு முன்பே இந்த தடை விதிக்கப்படுகிறது. அப்போது இறக்குமதியாளர் ஆர்டரை கேன்சல் செய்வார். இருவருக்கும் நஷ்டம் இல்லை.

2. பொருள் தயாரிக்கப்பட்டு கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு தடை விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் உள்நாட்டில் குறைந்த விலைக்கு பொருளை பெற்று நஷ்டத்தை குறைக்கலாம். அல்லது வேறு ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம்.

3. பொருள் கப்பலில் அனுப்பப்பட்ட பிறகு தடை விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் இறக்குமதியாளர் நினைத்தாலும் பொருளை துறைமுகத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே வேறு ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம். அல்லது தனது சொந்த செலவில் ஏற்றுமதியாளர் மீண்டும் பொருளை உள்நாட்டிற்கு கொண்டு வரலாம். மூன்றாவதாக ஏற்றுமதியாளர் செலவில் பொருளை இறக்குமதியாளர் நாட்டில் உள்ள துறைமுகத்தில் அழிக்க முயற்சி எடுக்கலாம். 




தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா? 

https://sites.google.com/view/micro-stories/home


இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.

#ஏற்றுமதி 


Comments