தேவையோ 138 பில்லியன் ஆனால் ஏற்றுமதியோ 700 மில்லியன்.
உலகளவில் ஆர்கானிக் பொருட்களுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த APEDA இந்த வருடம் ஆர்கானிக் பொருட்களை ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி எடுத்துள்ளது. தேசிய அளவிலான ஆர்கானிக் முன்னெடுப்பில் சுமார் பத்து லட்சம் விவசாயிகள் பங்கேற்று உள்ளதாக APEDA தெரிவித்துள்ளது. பல்வேறு விவசாய கூட்டமைப்புகளை உருவாக்கி ஆர்கானிக் பொருட்கள் விளைவிப்பதையும் APEDA உறுதி செய்ய விரும்புகிறது. உலக அளவில் ஆர்கானிக் பொருட்களை உபயோகப்படுத்த முயற்சி செய்யும் நாடுகளின் பட்டியலை வைத்துக்கொண்டு அவற்றை இந்திய ஆர்கானிக் ஏற்றுமதியாளர்களுடன் இணைக்க APEDA முயற்சி எடுக்கும் என்று தெரிகிறது. உலக அளவில் ஆர்கானிக் சந்தை 138 பில்லியன் டாலர்கள். நாம் கடந்த வருடம் ஏற்றுமதி செய்த ஆர்கானிக் பொருட்களின் மதிப்பு 700 மில்லியன் டாலர்கள். தேவை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதை பூர்த்தி செய்ய APEDA வரும் காலங்களில் கடுமையாக உழைக்கும் என்று தெரிகிறது. வாய்ப்பிருக்கும் மக்கள் இந்த ஜோதியில் இணைந்திடுங்கள்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment