இந்திய பொருட்களுக்கு ஏங்கும் நாடுகள்

இந்திய பொருட்களுக்கு ஏங்கும் நாடுகள்

உள்நாட்டில் உற்பத்தி குறைவால் இந்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் தடை விதித்துள்ளது.

அப்படி தடை விதிக்கப்பட்டாலும் பல நாடுகளில் நேரடியாக இந்திய அரசிடம் இருந்து தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பொருட்களை பெறுகிறது.

கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. பூட்டான் உட்பட ஒரு சில நாடுகள் இந்தியாவிடம் இருந்து கோதுமை வாங்கியது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு கோட்டா முறை கொண்டுவரப்பட்டது. பல நாடுகள் இந்திய சர்க்கரை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

அரிசி ஏற்றுமதிக்கு தடையும் ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டது. மலேசியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவிடம் இருந்து அரிசி கேட்டன. இந்திய அரசும் ஒரு சில நாடுகளுக்கு அரிசி அனுப்பி உள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டது. பங்களாதேஷ் அரசு தங்கள் தேவைக்காக வெங்காயத்தை இந்திய அரசிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது.

இது போன்ற உணவுப் பொருட்களுக்கு ஏற்றுமதி வரை விதிக்கக்கூடாது என்று உலக வர்த்தக மையம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதும் நடந்து வருகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments