சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கெடுபிடி
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுகிறது.
இந்திய சுங்கத்துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்களை பயணிகள் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
பொதுவாக பண்டிகை காலங்களில் வெளிநாட்டுக்கு செல்வோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இங்கிருந்து இனிப்புகள் கொண்டு செல்வார்கள்.
அதுபோல எந்த வகையான இனிப்புகளையும் கொண்டு செல்ல தற்போது சென்னை விமான நிலையத்தில் அனுமதிப்பதில்லை. குறிப்பாக இலங்கைக்கு செல்வோர் இங்கிருந்து காட்டன் புடவைகள் மற்றும் லுங்கி களை கொண்டு செல்வார்கள். அதற்கும் இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு செல்வோர் பொதுவாக அங்கிருந்து லட்டை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். அது கூட இப்போது சென்னை விமான நிலையத்தில் மறுக்கப்படுகிறது.
ஆகவே பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற தொந்தரவுகள் இல்லாத திருச்சி மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை பயணிகள் தற்போது நட துவங்கி உள்ளனர்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment