ஏற்றுமதியில் விவசாயிகள் பங்கேற்க மத்திய அரசு முயற்சி.

ஏற்றுமதியில் விவசாயிகள் பங்கேற்க மத்திய அரசு முயற்சி.


இந்திய அளவில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் பல்வேறு பொருட்கள் அதன் உறுப்பினர்களான விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

அப்படி கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் உள்நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஏற்றுமதி மிக மிக குறைவாக செய்யப்படுகிறது.

குறிப்பாக 17 சதவீதம் அளவிற்கு பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ஏற்றுமதி இரண்டு சதவீதம் தான். தற்போது மத்திய அரசு இதற்கான தனியாக ஒரு கூட்டமைப்பை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய முயற்சி எடுத்து வருகிறது.

இந்த முயற்சியின் மூலம் முதல் ஏற்றுமதி ஆர்டர் 7000 கோடி ரூபாய்க்கு கிடைத்துள்ளது. இதில் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் ஒவ்வொரு விவசாயிக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த ஏற்றுமதி ஆர்டர் சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா? 

https://sites.google.com/view/micro-stories/home


எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.

#ஏற்றுமதி

 

Comments