சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் தொடரும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் தொடரும்
இந்தியாவிலிருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் முதல் புதிய மார்க்கெட்டிங் வருடம் துவங்குவதால் மீண்டும் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்நாட்டில் விளைச்சல் குறைவு, விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தியா அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியா ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் படி சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு எந்த ஒரு தடையும் இல்லை.
இதை சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத அனைத்து சர்க்கரைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments