பாஸ்மதி அரிசி ஏற்றுமதி - மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை

பாஸ்மதி அரிசி ஏற்றுமதி - மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை

பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயத்துள்ளது.
தன் ஒன்றுக்கு 1200 அமெரிக்க டாலருக்கு குறைவாக பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்ய முடியாது.
சர்வதேச அளவில் பாஸ்மதி அரிசிக்கான விலை குறைந்து வருவதால் இந்திய பாஸ்மதி ஏற்றுமதியாளர்கள் ஒரு கோரிக்கையை வைத்தனர்.
குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை 1200 லிருந்து 850 டாலராக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.
அரசு இந்த விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பியிருக்கும் சூழலில் சமீபத்தில் மத்திய அரசு பழைய விலையே தொடரும் என்று அறிவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்தான்புல்லில் நடந்த வர்த்தக கண்காட்சியில் இந்தியா சார்பாக பங்கேற்ற பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பஞ்சாபில் உள்ள பல்வேறு ஏற்றுமதியாளர்கள் ஏமாந்து போய் உள்ளனர்.
இதே போல பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியை ஒரு டன்னுக்கு 80 டாலராக மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது ஆனால் இது பற்றி மத்திய அரசு இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.


தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா? 
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி 

Comments