ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கௌரவம்.

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கௌரவம்.

ஏற்றுமதியாளர்கள் தங்களது ஏற்றுமதி ஆவணங்களை பட்டையகணக்காளரின் சான்றிதழ் உடன் விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து மத்திய அரசு அந்த குறிப்பிட்ட ஏற்றமதியாளர்களுக்கு ஸ்டார் அந்தஸ்து வழங்கும்.
இந்த ஸ்டார் அந்தஸ்து பெறுவதன் மூலம் துறைமுகத்தில் ஏற்றுமதி நடைமுறையில் கால தாமதம் என்பது பெருமளவு தவிர்க்கப்படும்.
சில ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்களுக்கு பேங்க் கேரண்டி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து விலக்கு பெறுவார்கள். இதுபோல பல அனுகூலங்கள் ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும்.
இந்த ஸ்டார் அந்தஸ்து பெறுவதற்கான விண்ணப்பம் இனி நேரடியாக பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஏற்றுமதியாளரின் அனைத்து ஏற்றுமதி இறக்குமதி நடைமுறைகள் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசே தகுதியான நிறுவனங்களுக்கு ஸ்டார் அந்தஸ்தை நேரடியாக வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
இது முழுக்க முழுக்க டிஜிட்டல் நடைமுறை சார்ந்தது என்பதால் இதில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. மேலும் ஏற்றுமதி ஆளர் இதற்கான தனியாக விண்ணப்பம் செய்ய தேவையும் இல்லை.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா? 
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி 

Comments