இந்திய ஏற்றுமதியை தாங்கிப் பிடிக்கும் இ காமர்ஸ் ஏற்றுமதி.

இந்திய ஏற்றுமதியை தாங்கிப் பிடிக்கும் இ காமர்ஸ் ஏற்றுமதி.
இந்திய அரசு வெளியிட்ட தகவல்களின்படி கடந்த ஐந்து வருடங்களாக நமது ஏற்றுமதியின் வளர்ச்சி குறைவாகவே உள்ளது. குறிப்பாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் நகைகள் ஏற்றுமதி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பிளாஸ்டிக் ஏற்றுமதி போன்றவை மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தையே கண்டுள்ளன. அதே நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருக்கும் செய்தி என்னவென்றால் இகாமர்ஸ் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்பது. குறிப்பாக இந்திய அளவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏற்றுமதியாளர்கள் அமேசான் மூலம் பல்வேறு பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த வருடம் அமேசான் ஏற்றுமதி மதிப்பு என்பது எட்டு பில்லியன் டாலர்களை எட்டும் என்று தெரிகிறது. ஏற்றுமதியில் நமக்கு ஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது அதை நாம் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments