ஏற்றுமதியில் திருட்டை தவிர்ப்பது எப்படி?
ஏற்றுமதியில் பல்வேறு இடங்களில் திருட்டு நடைபெறுகிறது.
துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்தின் போது திருட்டு நடைபெறுவதை தவிர்க்க பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் எப்போது செய்யப்பட்டுள்ளன.
தற்போது பெரும்பாலான திருட்டு பொருட்களை துறைமுகத்திற்கு அனுப்பும் போது தான் நடைபெறுகிறது.
சமீபத்தில் சென்னையில் இருந்து துறைமுகத்திற்கு அனுப்பப்பட்ட டயர்கள் திருடு போயின.
சென்னை நிறுவனம் பிரேசில் நாட்டுக்கு 1500 டயர்களை ஏற்றுமதி செய்தது.
சீல் விடப்பட்ட கண்டெய்னர் லாரி மூலம் எடுத்துச் செல்லப்படும் போது வழியில் லாரியை நிறுத்தி சேலை உடைக்காமல் கதவை கழற்றி 495 டயர்களை திருடி உள்ளனர். இதற்கு லாரி டிரைவரும் உடந்தை. இது போன்ற திருட்டை தடுக்க ஜிபிஎஸ் வசதி உள்ள டிரக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலையில் இருந்து துறைமுகம் வரை டிரக் பயணிப்பதை ஒரு நபர் ஆன்லைன் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் பத்து நிமிடத்திற்கு மேல் லாரி ஒரு இடத்தில் நின்றால் டிரைவரை போன் மூலமாக அழைத்து என்ன நடக்கிறது என்று கேட்க வேண்டும் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக லாரி இருக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். டயர்களை ஏற்றிக்கொண்டு சென்ற இந்த லாரி சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டு டயர்கள் திருடப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் இது போன்ற ஆய்வை மேற்கொண்டு இருந்தால் இந்த திருட்டு தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவர்கள் திருடு போனது பிரேசில் நாட்டிற்கு சென்ற பிறகு ஏற்றுமதியாளருக்கு தெரிந்துள்ளது என்பது வேதனை.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment