இந்தியாவுடன் இலவச வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ள ஆப்பிரிக்க நாடுகள் விருப்பம்.
சமீபத்தில் 15 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஆப்பிரிக்க நாடுகளோடு இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி பேசப்பட்டது.
48 ஆப்பிரிக்க நாடுகளோடு இந்தியாவின் வர்த்தகம் 75 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் - பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள்.
ஆப்பிரிக்காவில் இருந்து நாம் தங்கம், கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் தாதுக்கள் இறக்குமதி செய்கிறோம்.
ஆப்பிரிக்க பிரதிநிதிகளை சந்தித்த மத்திய அமைச்சர் இலவச வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
தனித்தனியாகவோ அல்லது ஒட்டு மொத்த ஆப்பிரிக்க நாடுகளுடனும் இணைந்து இந்த வர்த்தகத்தை மேற்கொள்ள எங்களுக்கு சம்மதம் என்று இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இருநாட்டு வர்த்தகம் மேம்பட வாய்ப்பு உண்டு.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment