சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு காரணமாக மாற்று வழிகளை தேடும் இறக்குமதியாளர்கள்.
இந்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு கடந்த வருடத்திலிருந்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த வருடமும் அந்த கட்டுப்பாடு தொடர்கிறது.
இந்த வருடம் 6.1 மில்லியன் டன்கள் அளவிற்கு மட்டும் சர்க்கரை ஏற்றுமதி செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த கொள்ளளவை எட்டிய பிறகு சர்க்கரை உற்பத்தியாளர்களால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
தற்போது உலகில் பல நாடுகளில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக விசாரணைகள் வந்து கொண்டுள்ளன.
இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்ததால் உலகளவில் சர்க்கரை விலை அதிகரித்தது.
இதனால் வழக்கத்தை விட ஒரு டன் சர்க்கரைக்கு 50 ஆயிரம் ரூபாய் உபரி லாபம் பார்த்தனர் சர்க்கரை ஏற்றுமதியாளர்கள்.
நாம் அதிக அளவில் இந்தோனேசியா, பங்களாதேஷ், மலேசியா, சூடான், சோமாலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்கிறோம்.
தற்போது உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment