ஏற்றுமதியில் வெகு வேகமாக முன்னேறும் உத்தரப்பிரதேச மாநிலம்.
கல்வி அறிவு மிக குறைவாக உள்ள ஒரு சில மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று.
ஏற்றுமதி தொழிலில் மிக வேகமாக முன்னேறி இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள மாநிலமும் அதுவே.
உத்தரபிரதேசம் நான்கு புறமும் நிலங்களால் சூழப்பட்ட மாநிலமாகும்.
கடல் போக்குவரத்து இல்லாத மாநிலம்.
ஆனாலும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ஒரே வருடத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மாநில அரசு ஏற்றுமதிக்கான போக்குவரத்து கட்டணங்களுக்கு மானியம் கொடுத்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் நல்ல லாபத்துடன் ஏற்றுமதி செய்ய முடிகிறது.
இந்தியாவில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ஏற்றுமதியில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசம் உள்ளது.
இங்கிருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, இங்கிலாந்து, நேபாளம், பிரான்ஸ், ஸ்பெயின், வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் பங்குவேறு பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன.
தொலைத்தொடர்பு சாதனங்கள், மாட்டிறைச்சி, காட்டன் மற்றும் பாலிஸ்டர், தோல் காலணிகள், குதிரை சேனம், அலுமினியம், பட்டினால் கைகளால் நெய்யப்பட்ட தரை விரிப்புகள், இயந்திரங்கள், இன்ஜினியரிங் பொருட்கள், அரிசி, சர்க்கரை, இரும்பு மற்றும் எஃகு, கைவினைப் பொருட்கள் போன்றவை ஏற்றுமதியாகின்றன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment