இரு மடங்கு லாபம் தரும் தர்பூசணி.
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் APEDA உடன் இணைந்து தங்களது முதல் ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளது.
சுமார் 25 டன்கள் விதை இல்லாத தர்பூசணி பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பழத்தின் எடை பழம் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து கிலோகிராம் வரை உள்ளது. தர்பூசணி பழம் இந்தியா மட்டுமல்லாது ஈரானில் இருந்தும் துபாய்க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தர்பூசணி பழத்தின் எடை பழம் ஒன்றுக்கு பத்து கிலோ வரை இருக்கும்.
இந்திய தர்பூசணி பழத்தின் மொத்த விற்பனை விலை துபாயில் நாலு திர்ஹாம்ஸ். சில்லறை விலை 17 திர்ஹாம்ஸ். LULU போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் நேரடியாக விற்கும்போது நமக்கு நல்ல விலை கிடைக்கிறது. தினமும் இங்கிருந்து 15 கண்டெய்னர்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஈரான் தர்பூசணி பழத்தை விட இந்திய தர்பூசணி பழத்தை அங்குள்ள மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
எடை குறைவு மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம்.
துபைக்கு ஏற்றுமதி செய்வதால் உள்நாட்டில் கிடைக்கும் விலையை விட இருமடங்கிற்கும் அதிகமான விலை கிடைப்பதால் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment