ஏற்றுமதியில் சாதிக்கும் மாவட்டங்கள்.
வழக்கம்போல ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் குஜராத்.
குஜராத்தில் ஜாம்நகர் ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இங்கிருந்து
பெட்ரோலிய பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இரண்டாம் இடத்தில் குஜராத்தை சேர்ந்த சூரத் மாவட்டம் உள்ளது.
இங்கிருந்து அதிக அளவில் நகைகள் மற்றும் வைரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மூன்றாவது இடத்தில் மும்பை உள்ளது. இங்கிருந்து பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றில் வெங்காயம், திராட்சை, வைரம் போன்றவை மிக முக்கியமான ஏற்றுமதி பொருட்களாகும்.
நான்காவது இடத்தில் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 33 சதவீதம் காஞ்சிபுரத்தில் இருந்து ஏற்றுமதி ஆகிறது.
இங்கிருந்து அதிக அளவில் மின்னணு பொருட்கள் மற்றும் சாப்ட்வேர் ஏற்றுமதி ஆகிறது.
ஐந்தாவது இடத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கௌதம் புத்த நகர் உள்ளது.
இங்கிருந்து ஸ்மார்ட் போன்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.
மேலும் சட்டீஸ்கரில் இருந்து புழுங்கல் அரிசி அதிகமாக ஏற்றுமதி ஆகிறது.
அசாமில் இருந்து தேயிலை அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment