ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும் சாதிக்கும் இந்தியா.

ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும் சாதிக்கும் இந்தியா.

இந்தியாவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில ரகங்களுக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
100% உடைந்த அரிசிக்கு ஏற்றுமதி தடை உள்ளது.
இந்தச் சூழலிலும் இந்தியா அரிசி ஏற்றுமதியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் நமது போட்டியாளரான வியட்நாமில் இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு அரிசி விலை உயர்ந்துள்ளது.
ஐந்து சதவீத உடைந்த அரிசி டன் ஒன்றிற்கு வியட்நாமில் இருந்து 495 முதல் 500 டாலர்கள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வியட்நாமிலிருந்து அதிகளவு அரிசி வாங்கும் பிலிப்பைன்ஸ் விலை உயர்வு காரணமாக அங்கிருந்து அரிசி இறக்குமதியை பெரும் அளவு குறைத்துள்ளது.
தாய்லாந்து ஐந்து சதவீத உடைந்த அரிசியை டன் ஒன்றுக்கு 480 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்கிறது.
ஆனால் உலகிலேயே இந்தியா மட்டும் 5 சதவீத உடைந்த அரிசியை 382 டாலர் முதல் 388 டாலர் விலை அளவில் டன் ஒன்றிற்கு ஏற்றுமதி செய்கிறது.
ஆகவே பெரும்பாலான நாடுகள் இந்தியாவில் இருந்து அரிசி வாங்க விரும்புகின்றன.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments