இ காமர்ஸ் ஏற்றுமதியை அதிகப்படுத்த அடுத்த கட்ட முயற்சி..

இ காமர்ஸ் ஏற்றுமதியை அதிகப்படுத்த அடுத்த கட்ட முயற்சி..
இகாமர்ஸ் ஏற்றுமதி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.
இந்த இகாமர்ஸ் ஏற்றுமதி எதிர்காலத்தில் பெரிய அளவுக்கு வளர வாய்ப்புண்டு என்று பல்வேறு கணிப்புகள் கூறுகின்றன.
இதையொட்டி இந்த இ-காமர்ஸ் ஏற்றுமதியை மென்மேலும் வளர்த்து எடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி சமீபத்தில் வெளியான வெளியுறவு வர்த்தக கொள்கையில் இகாமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்கேற்பில் அமல்படுத்தப்படும்.
இதில் குளிர்பதன கிடங்குகள், பேக்கிங், லேபிளிங், சான்றிதழ், தரச் சான்று வழங்கும் ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது இகாமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments