இறக்குமதி வரியை குறைக்க இந்திய அரசு பங்களாதேஷிற்கு கடிதம்.
இந்தியாவில் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு பங்களாதேஷ். மிக அருகில் உள்ள நாடு, நட்பு நாடு, சாலை வழியாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை இரு நாடுகளும் மேற்கொள்ள முடியும் போன்ற பல்வேறு சாதகங்கள் இந்தியா மற்றும் பங்களாதேஷ்க்கு உண்டு.
தங்கள் நாட்டு தேவைக்கான பெரும்பாலான பொருட்களை பங்களாதேஷ் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவு திராட்சை பழங்களை பங்களாதேஷ் இறக்குமதி செய்யும்.
இதற்கான இறக்குமதி வரி 32 டாக்கா ஒரு கிலோவுக்கு இருந்தது.
அது தற்போது 64 டாக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சுமார் 89 ஆயிரம் டன் திராட்சை பழங்களை நாசிக்கிலிருந்து பங்களாதேஷ் இறக்குமதி செய்துள்ளது.
இந்த வருடம் இந்த இறக்குமதி வரி உயர்வு காரணமாக பெரிய அளவில் ஆர்டர்கள் வரவில்லை.
திராட்சை ஏற்றுமதியாளர்கள் இதை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அதன்படி மத்திய அரசு பங்களாதேஷிற்கு எழுதிய கடிதத்தில் இறக்குமதி வரியை குறைக்க வலியுறுத்தி உள்ளது.
பங்களாதேஷ் அரசு இறக்குமதி வரியை குறைக்கும் போது இந்த வருடம் திராட்சை ஏற்றுமதி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment