தமிழகத்தில் சூடு பிடிக்கும் மாம்பழம் ஏற்றுமதி.

தமிழகத்தில் சூடு பிடிக்கும் மாம்பழம் ஏற்றுமதி.
கோயம்புத்தூரில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு மாம்பழம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் மாம்பழ சீசனில் இந்தியா முழுவதும் மாம்பழம் ஏற்றுமதி என்பது அதிகமாக நடக்கும்.
இந்த வருடம் கடந்த வருடத்தை விட மிக அதிக அளவில் மாம்பழம் ஏற்றுமதி நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் கோயம்புத்தூரில் இருந்து மாம்பழங்கள் bonded truck service எனப்படும் சேவை மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நாடுகளுக்கு கோயம்புத்தூரில் இருந்து நேரடி விமானம் இல்லை. ஆனால் கோயம்புத்தூரில் கார்கோ பிரிவில் நாம் bonded truck service மூலம் புக்கிங் செய்யும் போது மேற்கண்ட நாடுகளுக்கு அருகில் உள்ள கொச்சி மற்றும் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து சரக்குகள் அனுப்பி வைக்கப்படும். இது ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய வசதியாக உள்ளது. ஒரு வாரத்திற்கு சார்ஜாவுக்கு ஆறு டன் மாம்பழங்கள் ஏற்றுமதி ஆகின்றன. சிங்கப்பூருக்கு அதிகபட்சமாக ஒரு டன் அளவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கக்கூடும். பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments