அதிகரிக்கும் மாம்பழ ஏற்றுமதி..
மும்பை ஏர்போர்ட்டில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு மாம்பழ ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
வழக்கமாக இது போன்ற மாம்பழ சீசனில் விமானம் மூலம் மாம்பழங்கள் ஏற்றுமதி ஆகும் போது விமானத்தில் இடம் தட்டுப்பாடு இருக்கும். சரியான நேரத்தில், சரியான விமானத்தில் பொருட்களை அனுப்புவது ஏற்றுமதியாளர்களுக்கு சவாலாக இருக்கும். ஆனால் இந்த முறை அனைத்தும் திட்டமிடப்பட்டு எந்த ஒரு காலதாமதமும் இல்லாமல் மும்பையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி ஆகின்றன. பிராங்பேர்ட் ஒரு புதிய சந்தையாக உருவெடுத்துள்ளது. அதிக அளவில், இதுவரை இல்லாத வகையில், மாம்பழங்களை பிராங்பேர்ட்க்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
ஆனால் மாம்பழங்களை கடல் வழியில் ஏற்றுமதி செய்வது என்பது தற்போது பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
மும்பை JNPT துறைமுகத்தில் இருந்து குளிர் ஊட்டப்பட்ட கண்டெய்னர்கள் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ரீப்பர் பிளக் எனப்படும் சரக்கு போக்குவரத்தில் தட்பவெட்ப நிலையை உறுதி செய்யும் ஒரு உபகரணம் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை. இந்த துறைமுகம் மிக விரைவில் சேவை கட்டணத்தை 7.5 சதவீதம் உயர்த்துவதாக முடிவு எடுத்துள்ளது ஏற்றுமதியாளர்களுக்கு கவலை தரும் செய்தியாகும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment