இந்திய கோதுமையை நம்பி இருக்கும் நேபாளம்.
கடந்த வருடம் இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்திய அரசாங்கம் தேவை உள்ள நாடுகளுக்கு நலன் அடிப்படையில் தானே ஏற்றுமதி செய்து வருகிறது.
நேபாளத்திற்கு 50,000 டன்கள் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி 33 ஆயிரம் டன்கள் ஏற்கனவே ஏற்றுமதி செய்துவிட்டது இந்தியா.
மீதமுள்ள 14,000 டன்கள் ஏற்றுமதி செய்வது இப்போது முடியாத காரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் வெப்ப அலை தாக்குதல் மற்றும் அறுவடை மிகவும் குறைந்து போனது இதற்கு காரணம்.
அதைவிட முக்கியம் உள்நாட்டு தேவையே சமாளிக்க வேண்டும்.
ஆனால் நேபாளம் 2 லட்சம் டன்கள் கோதுமை இந்தியா எங்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய கோதுமை ஏற்றுமதியை நிறுத்திய பிறகு நேபாளத்தில் உள்ள 80% மாவு அரைக்கும் மில்கள் மூடப்பட்டு விட்டன.
ஒவ்வொரு முறை இந்திய அரசு கோட்ட அடிப்படையில் நேபாளத்திற்கு கோதுமையை ஏற்றுமதி செய்யும் போது அங்கு மார்க்கெட் விலை ரூபாய் ஐந்திலிருந்து ஏழு ரூபாய் வரை கிலோவிற்கு குறைகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment