நான்காம் வகுப்பு படித்தவர் எப்படி ஏற்றுமதியாளராக உருவானார்?
உத்தர பிரதேசத்தை சேர்ந்த வரும் நான்காம் வகுப்பு மட்டுமே படித்த ரவீந்திர குமார் என்பவர் தரை விரிப்புகளை தயார் செய்து மொத்த விற்பனை செய்து வந்தார்.
இந்தத் தரை விவரிப்புகள் விலை குறைந்தவை ஆனால் பார்ப்பதற்கு ஆடம்பர தரை விரிப்பு போல இருக்கும்.
தொழில் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோது கொரோனா தொற்று வந்தது.
அதன் பிறகு தனது தொழிலை முற்றிலுமாக மூட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் ரவிந்திரகுமார்.
கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் தொழிலை துவங்குவதற்கு கையில் முதலீடு இல்லை.
இந்த சமயத்தில் இந்திய தபால் நிலையம் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது.
தக் நிர்யாத் கேந்திரஸ் என்ற இந்திய தபால் நிலைய அமைப்பு சிறு குரு தொழில் செய்பவர்களை சந்தித்து ஒரு பயிற்சி வகுப்பு நடத்தியது.
அதில் ரவீந்திர குமார் பங்கேற்றார்.
பல்வேறு பொருட்களை உலகில் உள்ள பல நாடுகளில் உள்ள தனி நபருக்கு இகாமர்ஸ் ஏற்றுமதி பத்தின தொழில் பயிற்சி வகுப்பு அது.
அதனை முழுமையாக கற்றுக் கொண்டு தரை விரிப்புகளை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.
இந்த அமைப்பு ஏற்றுமதி செய்பவரின் வீட்டிலிருந்து பொருளைப் பெற்று உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனி நபர்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
போஸ்டல் பில் ஆஃப் எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க ரவீந்திர குமார் தற்போது தபால் நிலையம் செல்ல வேண்டியதில்லை.
ஆன்லைன் மூலமாக செய்வதற்கான வசதி இந்திய தபால் நிலையத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழில் முடங்கிப் போயிருந்த ஒரு குரு தொழில் முனைவோருக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இந்தியா தபால் துறைக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment