பிரகாசமான இகாமர்ஸ் ஏற்றுமதி வாய்ப்பு.

பிரகாசமான இகாமர்ஸ் ஏற்றுமதி வாய்ப்பு.
உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி மையம் இந்தியாவின் இ-காமர்ஸ் ஏற்றுமதியை பற்றி ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி தற்போதைய இந்தியாவின் இகாமர்ஸ் ஏற்றுமதி இரண்டு பில்லியன் டாலர்கள் ஆகும்.
இது இந்தியாவின் மொத்த பொருள் ஏற்றுமதியில் 0.5% மட்டுமே.
2030க்குள் இந்த இ-காமர்ஸ் ஏற்றுமதி 350 பில்லியன் டாலர்களாக உயர வாய்ப்புண்டு.
தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் ஏற்பட்ட பிரம்மாண்ட வளர்ச்சியை விட இகாமர்ஸ் ஏற்றுமதியில் அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய இ காமெர்ஸ் ஏற்றுமதி 2030இல் 800 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 350 பில்லியன் டாலர் வளர்ச்சியை எட்டுவதற்கு இந்திய அரசு சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.
சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாம் நாடுகள் போல இ-காமர்ஸ் ஏற்றுமதிக்காக தனி கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இகாமர்ஸ் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஐந்து லட்சம் முதல் 25 லட்சம் வரை கடன் உதவி இ-காமர்ஸ் ஏற்றுமதியில் பொருள்களை அனுப்பும் செலவிற்காக ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
என்பது உட்பட மொத்தம் 21 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வற்புறுத்துகிறது.
கைவினைப் பொருட்கள், நகைகள், பாரம்பரிய உடைகள், அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் போன்றவை பிரகாசமான இ-காமர்ஸ் ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments