சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

பொருள் தேர்வு; நாம் இறக்குமதி செய்ய விரும்பும் பொருளுக்கு நமது நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடோ அல்லது தடையோ இருக்கிறதா என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்றுமதியாளரை கண்டுபிடித்தல்: பல்வேறு இணையதளங்கள் வாயிலாக நாம் சீனாவில் உள்ள ஏற்றுமதியாளர்களை கண்டுபிடிக்க முடியும்.
மாதிரி மற்றும் விலை நிர்ணயம்: பொருள் மாதிரியைப் பெற்று நமக்கு திருப்தியாக இருக்கும் போது விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பணம் செலுத்தும் முறை: பாதுகாப்பான பணம் செலுத்தும் முறையை இருவரும் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இறக்குமதிக்கு பிந்தைய செலவு: பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி, உள்நாட்டு போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
ஆர்டர் வழங்குதல்: நேரடியாக சைனாவிற்கு சென்று குறிப்பிட்ட நிறுவனத்தை பார்வையிட்டு அவர்கள் அந்த பொருளை உற்பத்தி செய்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டு ஆர்டர் வழங்க வேண்டும்.
தரப்போடி சோதனை மற்றும் பேக்கிங்: நேரடியாகவோ அல்லது சர்வதேச தரப் பரிசோதனை மையம் மூலமாகவோ நாம் எதிர்பார்த்த தரம் அந்த பொருளுக்கு இருக்கிறதா என்பதை பொருள் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பாக சோதனை செய்து கொள்ள வேண்டும். முதல் ஒன்று இரண்டு ஆர்டர்களுக்கு பொருளை பேக்கிங் செய்து கண்டெய்னரில் ஏற்றுவது வரை நாம் முன் நின்று கண்காணிப்பது நல்லது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments