முட்டை ஏற்றுமதியில் பெருகும் வாய்ப்பு.

முட்டை ஏற்றுமதியில் பெருகும் வாய்ப்பு.

தமிழகத்தில் நாமக்கல் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது.
முட்டை ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.
நாளொன்றுக்கு 5 கோடி முட்டைகள் நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மாதம் ஒன்றுக்கு 150 கண்டெய்னர்கள் மூலம் மஸ்கட், குவைத், கத்தார், துபாய், சிரியா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பர் முதல் மலேசியாவிற்கு மாதம் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் கண்டிப்பாக சில சான்றிதழ்கள் பெற வேண்டும். பவுல் காலரா, ND TEST, SALMENOLA போன்ற சான்றிதழ்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டால் தான் இங்கிருந்து ஏற்றுமதி செய்ய முடியும். அதற்கான சரியான உள்கட்டமைப்பு நாமக்கல்லில் செய்யப்படாததால் இந்த சான்றிதழ்கள் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் மலேசியாவிற்கு மாதம் ஒன்றுக்கு 50 கண்டெய்னர்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கும் சூழலில் இந்த காலதாமதம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
சான்றிதழ்கள் பெறுவதற்கு ஏற்படும் தாமதம் மலேசிய ஏற்றுமதியில் எதிரொலிக்கிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments