பொம்மை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்.

பொம்மை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்.

நம் சில வருடங்களுக்கு முன்பாக அதிக அளவில் சைனாவில் இருந்து பொம்மை இறக்குமதி செய்தோம்.
தரம் குறைவான அந்த பொம்மை இந்திய மார்க்கெட்டில் வியாபித்து இருந்தது.
இந்த தரக்குறைவான பொம்மைகளுக்காக அதிக அளவில் அன்னிய செலாவணி செலவிடப்பட்டது.
இதை தவிர்க்க பொம்மை இறக்குமதி மற்றும் உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டை கொண்டு வந்தது இந்திய அரசாங்கம்.
இதன் மூலம் பெருமாளின் சுமார் 75 சதவீதம் பொம்மை இறக்குமதி குறைந்தது.
அதே நேரத்தில் உள்நாட்டில் தரமான பொம்மை உற்பத்திக்காக முதலீடுகளை செய்தது மத்திய அரசு.
அதன் விளைவாக இப்போது பொம்மை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் முதல் நவம்பர் மாத காலகட்டம் வரை 395 மில்லியன் டாலருக்கு நாம் பொம்மை ஏற்றுமதி செய்துள்ளோம்.
நாம் அதிகம் பொம்மை ஏற்றுமதி செய்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ், டென்மார்க், கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments