அதிகரிக்கும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி.
பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்களில் ஒரு சிலவற்றிற்கு மத்திய அரசு சமீபத்தில் 20% ஏற்றுமதிவரி விதித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
ஆனால் பாஸ்மதி அரிசிக்கு அந்த மாதிரி எந்த ஒரு வரியும் விதிக்கப்படவில்லை.
பஞ்சாப் ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதி அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகள் இந்திய பாஸ்மதி அரிசியை விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒட்டுமொத்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் 50 சதவீதத்தை வரும் 3 நாடுகள் வாங்குகின்றன.
ஈரான் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் தான் அவை.
பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி மட்டுமல்லாமல் அதனுடைய விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் ஒரு டன் பாஸ்மதி அரிசி 868 டாலருக்கு நாம் ஏற்றுமதி செய்தோம்.
இந்த வருடம் ஒரு டன் பாஸ்மதி அரிசி 1044 டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் ஏற்றுமதி அவர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் நமக்கு போட்டியாளராக இருந்தாலும் நமது பாசுமதி அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment