அரசு நீக்கிய இறக்குமதி வரி - அல்லல்படும் உற்பத்தியாளர்கள்.

அரசு நீக்கிய இறக்குமதி வரி - அல்லல்படும் உற்பத்தியாளர்கள்.

மத்திய அரசு சமீபத்தில் கொசுவலை இறக்குமதி வரியை 20 சதவீதத்திலிருந்து முழுமையாக நீக்கியது.
நாம் சைனா, நேபாளம், பங்களாதேஷ், தாய்வான், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொசு வலையை இறக்குமதி செய்கிறோம்.
கொசுவலை இறக்குமதியாளர்களுக்கு அரசின் இந்த முடிவு நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கொசுவலை உற்பத்தியாளர்கள் இதனால் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கரூர் பகுதியில் பல்வேறு கொசுவலை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
உலக வர்த்தக அமைப்பு நிர்ணயித்த ஆல்பா சைபர் மெத்தரின் என்ற வேதிப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் எட்டு மட்டுமே உள்ளன. அவற்றில் இரண்டு கரூரில் உள்ளது. இது போக உள்நாட்டு தேவைகளுக்காக தயாரிக்கப்படும் கொசு வேலை நிறுவனங்கள் சுமார் 200 உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் கொசுவலைகள் பிஹார், அஸ்ஸாம், உத்தர பிரதேஷ், சட்டீஸ்கர், டெல்லி, மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
வட இந்தியாவில் இந்த கொசு வலையின் பயன்பாடு பல தளங்களில் உள்ளது.
மக்காச்சோளத்தை வெயிலில் உலர்த்த பயன்படுகிறது.
மத்திய மாநில அரசு தோட்டக்கலைத் துறையில் மேற்கூரை அமைக்க பயன்படுகிறது.
விவசாய கிணறுகளை மூட பயன்படுகிறது.
அரசு தனியார் மருத்துவமனைகளில் இதன் பயன்பாடு உள்ளது.
நகர்ப்புறங்களில் வீடுகளில் தனிநபர் பயன்பாடும் உள்ளது.
இப்படி தயாரிக்கப்படும் கொசுவலை சுமார் 250 ரூபாய்க்கு வட இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் இறக்குமதி செய்யப்படும் கொசு வலை 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments