ஏற்றுமதியில் இந்தியாவை முந்திய சிறிய நாடு - மத்திய அரசு எடுத்த முயற்சி என்ன?

ஏற்றுமதியில் இந்தியாவை முந்திய சிறிய நாடு - மத்திய அரசு எடுத்த முயற்சி என்ன?

இறால் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.
சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து போட்டி போட்டுக் கொண்டு கடல் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தனர்.
ஒரு நேரத்தில் இவர்கள் இருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு ஏற்றுமதியாளர்கள் தவித்தனர்.
ஆர்டர்களின் அளவு கூடிக் கொண்டே இருந்தது.
அதே நேரம் எக்குவடர் என்ற சிறிய நாடு இறால் வளர்ப்பில் முதலீடு செய்ய ஆரம்பித்தது.
சர்வதேச தரத்தில் இறால் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியில் இறங்கிய அந்த நாடு ஒரே வருடத்தில் 88 சதவீத வளர்ச்சி கண்டது.
அமெரிக்கா அருகில் இருப்பதாலும், உற்பத்தி செலவு குறைவாக இருப்பதாலும் மிக எளிதில் அமெரிக்க மார்க்கெட்டை கைப்பற்றியது.
விலை குறைவு என்பதால் சீனாவும் இந்தியாவை விட்டு எக்குவடர் நாட்டை அணுகியது.
விளைவு, இந்தியாவில் இறால் ஏற்றுமதி பெரும் வீழ்ச்சியை கண்டது.
பல இறால் பண்ணையாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.
மத்திய அரசுக்கு இந்த சூழல் விளக்கப்பட்டது.
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த பட்ஜெட்டில் இறால் தீவனத்தின் இறக்குமதி வரி  குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக உற்பத்தி விலை குறைந்தது.
இறால் தீவனம் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது விலை குறைந்துள்ளதால் மீண்டும் அமெரிக்கா மற்றும் சைனா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments