விவசாயிகள் செய்யும் ஏற்றுமதி

விவசாயிகள் செய்யும் ஏற்றுமதி..

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சம்பா மிளகாய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கமுதி பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து மிளகாய் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்கிறது.
சுமார் 500 மெட்ரிக் டன் அளவிற்கு அறுவடை செய்யப்படும் இந்த மிளகாய் முழுக்க முழுக்க அமெரிக்க நாட்டின் தரத்திற்கு ஏற்ப விளைவிக்கப்படுகிறது.
அவ்வப்போது அமெரிக்காவிலிருந்து வரும் இறக்குமதியாளர்கள் கமுதியில் உள்ள விவசாயிகளிடம் அவர்கள் விளைவிக்கும் முறை பற்றி கேட்டு தரத்தை உறுதி செய்து கொள்கிறார்கள்.
விளையும் பருவத்தில் மாதிரிகள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டு தரம் சோதிக்கப்படுகிறது.
சரியான தரம் உறுதி செய்யப்படும்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய அந்த அறுவடை அனுமதிக்கப்படுகிறது.
சமீபத்தில் 200 மெட்ரிக் டன் அளவிற்கு சம்பா மிளகாய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments