1.20 கோடி ஏமாந்த ஏற்றுமதியாளர், விரைவாக மீட்டெடுத்த சங்கம்.

1.20 கோடி ஏமாந்த ஏற்றுமதியாளர், விரைவாக மீட்டெடுத்த சங்கம்.

திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு இறக்குமதியாளருக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
ஜனவரி 14-ஆம் தேதி சரக்கை அனுப்ப தயாரானது ஏற்றுமதி நிறுவனம்.
இறக்குமதியாளரிடம் இருந்து ஒரு லட்சத்து 35,000 ஈரோ (இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம்) அனுப்பப்பட்டு விட்டதாக ஒரு மின்னஞ்சல் வந்தது.
உடனடியாக சரக்கை கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
அதற்கு அடுத்த நாள் முதல் பொங்கல் பண்டிகை என்பதால் வங்கிகள் தொடர்ந்து விடுமுறை.
விடுமுறை காலம் முடிந்து இறக்குமதியாளர் வங்கிக்கு சென்று விசாரித்த போது பணம் வரவில்லை.
இது சம்பந்தமாக இறக்குமதியாளரை ஏற்றுமதியாளர் மீண்டும் தொடர்பு கொண்டு விரிவாக விசாரித்த போது தான் ஹேக்கர்களால் இருவரும் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
ஏற்றுமதியாளர் மின்னஞ்சலை ஹேக் செய்து பணத்தை இந்திய வங்கிக்கு பதிலாக இங்கிலாந்தில் உள்ள வங்கிக்கு அனுப்புமாறு இறக்குமதியாளருக்கு மெயில் அனுப்பியது தெரியவந்தது.
உடனடியாக ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் DGFT மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முழு பணமும் இங்கிலாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கி கணக்கில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறக்குமதியாளர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பணம் மீண்டும் இறக்குமதியாளருக்கு அனுப்பப்பட்டது.
பிறகு இறக்குமதியாளர் திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.
ஹேக்கர்கள் பணத்தை வங்கியிலேயே வைத்திருந்தது அதை மீட்டெடுப்பதற்கு வசதியாக போய்விட்டது.
இல்லையென்றால் ஏற்றுமதியாளருக்கு பொருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments