PHDCCI எழுதிய முக்கியமான கடிதம்
பஞ்சாப் ஹரியானா மற்றும் டெல்லியை சார்ந்த கூட்டமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் அமைப்பு மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஒரு முக்கியமான கடிதம் எழுதி உள்ளது.
ECGC என்ற ஏற்றுமதி கடன் உறுதி கழகம் சமீபகாலமாக பல்வேறு நாடுகளுக்கான கடன் உறுதி வழங்குவதில்லை.
குறிப்பாக ஸ்ரீலங்கா ரஷ்யா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன் உறுதி வழங்குவதை திரும்ப பெற்றுள்ளனர்.
இதனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல்வேறு ஏற்றுமதி உடன்படிக்கைகள் அப்படியே ஸ்தம்பித்து போய் உள்ளன.
இந்த உடன்படிக்கைகளை நடைமுறைக்கு கொண்டுவர ECGC அமைப்பின் கடன் உறுதி கடிதம் மிக மிக முக்கியமானது. ஏற்றுமதிக்காக வங்கிக் கடன் பெறுவதிலும் இந்த கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது மேற்கூறிய நாடுகளுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை மத்திய நிதி அமைச்சகம் கூர்மையாக கவனித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment