சிறுதானிய பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆண்டு.

சிறுதானிய பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆண்டு.

சிறுதானிய பொருட்களுக்கான ஆண்டாக 2023 இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறுதானியம் மற்றும் சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்த வருடம் மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்ய உள்ளது.
சிறுதானிய பயிரிடுதலை அதிகப்படுத்துதல், சிறுதானியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்தல், சிறுதானிய பொருட்களை பல்வேறு நாடுகளில் மார்க்கெட்டிங் செய்தல், பல நாடுகளில் சிறு தானிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்துதல் போன்ற பல முக்கியமான நிகழ்வுகளை மேற்கொள்ள உள்ளது மத்திய அரசு.
உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் 41% இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் சிறுதானியம் விளையும் மாநிலங்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம்.

#ஏற்றுமதி

Export import business consultant - WhatsApp 91-9043441374

Comments