முட்டை ஏற்றுமதிக்கு உருவான புதிய மார்க்கெட்.
இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் முட்டை ஏற்றுமதிக்கு முக்கியமான மையம் நாமக்கல்.
நாமக்கல்லில் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதில் ஒன்றரை கோடி முட்டைகள் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.
45 லட்சம் முட்டைகள் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்காக அனுப்பப்படுகிறது.
40 லட்சம் முட்டைகள் பெங்களூர் மாநகரம் வாங்குகிறது.
மற்றவை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மாதம் ஒன்றிற்கு சுமார் எட்டு கோடி முட்டைகள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது.
நம்மிடமிருந்து அதிக அளவில் முட்டைகளை வாங்குவது மஸ்கட், துபாய், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.
சமீபத்தில் மலேசியாவின் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு முகமது சாபு நாமக்கல்லிற்கு வந்திருந்தார்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் மற்றும் கோழி இறைச்சி பதப்படுத்துதலை பார்வையிட்டார்.
முதல்முறையாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு அவர் வருகையின் போது 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மலேசியாவின் ஒருநாள் கொள்முதல் மூன்று கோடி முட்டைகள் ஆகும்.
2023 ஆம் ஆண்டு 3 முதல் 4 கோடி முட்டைகளை நாம் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு என்று தெரிகிறது.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment