ஏற்றுமதியில் சாதிக்கும் சாமானியர்கள்.
இ காமர்ஸ் ஏற்றுமதி என்பது தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்.
இதில் இந்தியா, சைனா போன்ற நாடுகள் பெருமளவில் முன்னேறி வருகின்றன.
பெரும்பாலும் சாமானியர்கள் பெரிய அளவில் இதில் சாதித்து வருகின்றனர்.
இந்தியாவில் சாதாரண கிராமங்களில் இருக்கும் சாமானிய மக்கள் இகாமர்ஸ் ஏற்றுமதியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.
குஜராத்தில் பல்பொடி மற்றும் அழகு கிரீம் தயாரிக்கும் ஒருவர் ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் துருக்கி நாடுகளுக்கு அமேசான் குளோபல் ஸ்டோர் மூலமாக ஏற்றுமதி செய்து வருகிறார்.
மும்பை தாராவியில் தோல் பொருள்கள் தைக்கும் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்தவர் தொழிலை கற்றுக்கொண்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தோல் ஜாக்கெட்டுகளை லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு இகாமர்ஸ் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறார்.
பல்வேறு தோல்விகளுக்குப் பிறகு ஓய்வு பெற்ற நேவி கமாண்டர் மும்பையில் இருந்து பல் மருத்துவம் சம்பந்தமான உபகரணங்களை கொரியாவில் உள்ள பல பல் மருத்துவர்களுக்கும் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.
அமேசான் தவிர்த்து தற்போது ஈபே மூலமாகவும் நாம் உலகம் முழுவதும் ஈ காமர்ஸ் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
நாம் செய்ய வேண்டியது சிறு முயற்சி மட்டுமே.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment