இலங்கையோடு வர்த்தகம் செய்ய உருவாகும் புதிய வாய்ப்பு.

இலங்கையோடு வர்த்தகம் செய்ய உருவாகும் புதிய வாய்ப்பு.

இந்தியாவில் இருந்து செல்லும் சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகம் வழியாகத்தான் செல்கிறது.
அங்கு ஏற்படும் போக்குவரத்து தாமதம் ஏற்றுமதியில் அதிக செலவு மற்றும் சரக்கு போய் சேர்வதில் காலதாமதமும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் விதமாக குறைந்த செலவில் மிக விரைவாக சரக்கை இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை அரசு புதிய முயற்சி எடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திலிருந்து இந்தியாவிற்கு குறைந்த கொள்ளளவு கொண்ட ஒரு சரக்கு கப்பலை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்த சரக்கு கப்பல் ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்திலோ இயக்கப்படலாம் என்று தெரிகிறது.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இந்த சரக்கு கப்பல் இயங்க வாய்ப்பு உள்ளது.
இதனுடைய கொள்ளளவு 300 டன் ஆகும்.
இதன் மூலம் இலங்கை மற்றும் இந்தியாவின் இரு தரப்பு வர்த்தகம் மேம்பட வாய்ப்பு உண்டு என்று இலங்கை அரசு கூறுகிறது.
இந்தியாவிலிருந்து நாம் பல பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யவும் இலங்கையிலிருந்து வாழைப்பழம், புகையிலை, பனை மற்றும் தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யவும் வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments