இந்தியாவிலேயே நாசிக் முக்கிய ஏற்றுமதி மையமாக மாறப்போவது எப்படி?
சமீபத்தில் நாசிக்கில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் 1830 கோடி ரூபாய் முதலீட்டில் 226 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அந்த விழாவில் பேசும் போது நாசிக் தற்போது பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக உள்ளது என்று கூறினார்.
இங்கிருந்து வெங்காயம், திராட்சை, வாகன உதிரி பாகங்கள், வாகனங்கள் போன்றவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபாரத்திற்கு அனுப்பப்படுகின்றன.
இந்த நெடுஞ்சாலை பணி நிறைவடையும் போது டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேச நெடுஞ்சாலைகள் இதன் மூலம் இணைக்கப்படும்.
மேலும் சாலை போக்குவரத்து மட்டுமல்லாமல் இந்த நெடுஞ்சாலை மூலம் ரயில், விமானம் மற்றும் துறைமுகத்திற்கான இணைப்பும் சாத்தியமாகும்.
பொருட்களை மிக விரைவாக உள்நாட்டிலும் அல்லது ஏற்றுமதிக்கும் கொண்டு செல்வதற்கு எளிமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment