இந்திய பொருள்களுக்கு காத்திருக்கும் ரஷ்யா.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள வர்த்தக உறவு என்பது பல பத்தாண்டுகளாக நீடிப்பது. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிகழும் போர் காரணமாக ரஷ்யா பல உலக நாடுகளில் இருந்து பல்வேறு அழுத்தங்களை எதிகொள்கிறது. ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா. ரஷ்யா உடன் எந்த ஒரு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் பல்வேறு உள்நாட்டு தேவைகளுக்கு ரஷ்யாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்தியா மட்டுமே. சமீபத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 500 பொருள்களை இந்தியா எங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்று ரஷ்யா கேட்டுக்கொண்டது. இந்தியா அதற்கு தற்போது இசைவு தெரிவித்துள்ளது. இந்தியா சார்பில் எந்தெந்த பொருள்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்ய முடியும் என்று ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டு உள்ளது. மிக விரைவில் பல்வேறு இன்ஜினியரிங் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், உணவு பொருள்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படலாம். ரஷ்யாவில் இருந்து நாம் பல வருடங்களாக ராணுவ தளவாடங்களை வாங்கிக்கொண்டு இருக்கிறோம். இந்தியாவுக்கு ரஷ்யா நான்காவது பெரிய ஏற்றுமதி மார்க்கெட். நம்மிடம் இருந்து அவர்கள் மருந்து பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றனர். ராணுவ தளவாடங்கள் தவிர நாம் கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் உரம் போன்றவற்றை இறக்குமதி செய்கிறோம்.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment